கைகேயி வரமும் தசரதனின் துயரமும்

தசரதன் துயரம்
கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்
என்உள்நேர் ஆவிவேண்டி னுமின்றே உனதன்றோ?பெண்ணே!
வண்மைக் கைகேயன் மானே! பெறுவாயேல் மண்ணேகொள் நீமற்றையது ஒன்றும் மற
கைகேயி தசரதன் தனக்கு கொடுக்க வேண்டிய வரத்தை சமயம் அறிந்து கேட்கிறாள். 1...பரதனுக்கு பட்டம் சூட்டவேண்டும் ...
2..இராமன் பதினான்கு ஆண்டு காட்டுக்கு போகவேண்டும்.

கைகேயி கேட்ட வரத்தை காதால் கேட்ட தசரதன் நிலைகுலைந்து போகிறான். அப்போது தசரதன் கூறுகிறான்

என்னுடைய கண்கள் உனக்கு வேண்டும் என்று கேள் . நான் குருடனாகி சாகும் வரை கஷ்டப் பட்டாலும் சரி. நான் வரம் கொடுத்த படி அதனை இப்பொழுதே கொடுக்க கடமை பட்டுள்ளேன்
அது என்ன பிரமாதம் எனக்கு அற்புதமான இந்த இன்னுயிரை
வேண்டுமென்று கேள் அது சந்தேகமின்றி உனதாகிடும் .
எனது ஆருயிர் மனைவியே., வலிமை பொருந்திய கேகேய நாட்டு
மன்னன் பெற்றெடுத்த மான்போன்றவளே . உனக்கு வேண்டுமாயின் நீ பெற்றெடுத்த மகன் பரதனுக்கு முடிசூட்டி என்னுடைய நாட்டினுடைய மண்மொத்தத்தையும் எடுத்துக்கொள்.அடுத்த தாக கேட்டாயே (தசரதன் கைகேயி கேட்ட இரண்டாவதான வரத்தை மீண்டும் திரும்ப சொல்வதற்கும் அஞ்சி அவன் நெஞ்சமும் வாயும் சொல்ல மறுத்ததால் ) நீ மற்றொன்றை கேட்டாயே என்று அதைத் திரும்ப கூட சொல்லப் பொறுக்காது அதைமறந்துவிடு என்று சொன்னான். கேட்காதே என்று சொல்லாமல் அழுத்தமாக மற
என்று சொல்லி இராமனின் மேல் தசரதன் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்று கம்பர் தனது இந்த ஒரு பாடலில் விளக்குவது பற்றி தமிழறிஞ்சர் பலரும் அவ்வப்போது சிலாகித்துப்
பேசுவது வாடிக்கை. நீங்களும் ஆழ்ந்து படித்து இன்புறுங்கள்.


...

எழுதியவர் : பழனி ராஜன் (31-Mar-23, 6:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 23

மேலே