பாரதிதாசன் பன்மணித்திரள் - திருமண வாழ்த்துப்பா - அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருமண வாழ்த்துப்பா
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா / காய் மா தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
(1, 4 சீர்களில் மோனை)

திருமண மக்கள் நல்ல
..திருவேந்திப் புகழு மேந்திப்,
பருதியும் நிலவும் வாழும்
..பல்லாண்டு வாழ்வும் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு
..கமழ்மக்கள் பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார்
..பெற்றோரும் தமிழும் வாழ்க!

- பாரதிதாசன்

இது போன்ற வாய்பாடில் ஒரு விருத்தம் எழுதுங்களேன்! நானும் முயற்சிக்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-23, 11:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே