கோசல நாட்டில் சங்கு முதலியன தங்கும் இடங்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
கோசல நாட்டில் சங்கு முதலியன தங்கும் இடங்கள்!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
நீரிடை உறங்கும் சங்கம்; ..நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; ..தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; ..துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; ..பொழிலிடை உறங்கும் தோகை! 6
- நாட்டுப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்
கம்பரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடுள்ள திரு.கவின் சாரலன் போன்றோர்,
(விளம் மா தேமா அரையடிக்கு) என்ற எளிய வாய்பாடில்
(1, 4 சீர்களில் மோனை) அமைத்து ஒரு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாமே!

