இன்னொருநாள் இன்னொருநாள் என்றாலோ இன்பமில்லை - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)

இன்னிசையுங் கூடிவரும் இன்னிலையும்
..எளிதினிலே இன்ப மாக்கும்;
இன்னொருநாள் இன்னொருநாள் என்றாலோ
..இன்பமில்லை இன்னல் தானே!
சின்னகையும் ஆடிவருஞ் சிற்றிடையும்
..செழிப்பினையே சேர்க்கும் சேர்க்கும்;
தன்னிலையை அறிந்துகொண்டால் தாழ்வில்லை
..நான்சொல்வேன் தகவுந் தானே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-23, 9:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே