எத்தனை முகங்கள்

எத்தனை முகங்கள்;
அத்தனையும் அர்புதங்கள்;
எத்தனை எத்தனை முகங்கள்,
எத்தனை கோணங்கள்;
ஏன் இந்த மாற்றங்கள்;
ஏன் இந்த தடுமாற்றங்கள்;
முகம் முகம்;
முன்னிருந்து காட்டும் இந்த முகம்;
முந்தியே வந்து உன் குணத்தைக் காட்டும் முகம்;
அகத்தின் பிம்பமே, இந்த முகம்;
முகம் முகம்;
பிடிக்கும் முகம்; பிடிக்காத முகம்;
பிடிவாதம் பிடிக்கும் முகம்;
வடிக்கும் முகம்; வடிக்காதமுகம்;
நடிக்கும் முகம்; நடிக்காத முகம்;
சிரிக்கும் முகம், சிரிக்காத முகம்;
சீறிப்பாயும் முகம்; சிந்திக்கும் முகம்;
கோபக்கார முகம்; குணத்தைக் காட்டும் முகம்;
எத்தனை முகங்கள், எத்தனை மாற்றங்கள்;
எத்தனை தோற்றங்கள்;
முகத்திற்குள் எத்தனை முகங்கள்;
முகமூடிபோட்டு முகத்தை காட்டும் முகங்கள்;
ஒரு முகம்,பல பரிமாணங்கள்;
ஒரு முகம், அது அறிமுகம்;
ஒருமுகம், அது காட்டும் பல முகம்;
நிமிடத்தில் மாறும் முகம்;
நித்தம் கடு கடு என்றே சீறிப்பாயும் முகம்;
முகம் முகம் அகத்தை காட்டும் முகம்;
பிஞ்சு முகம், பிரபஞ்சமே கொஞ்சும் முகம்;
மழலைபேசும் முகம், மயக்கும் இந்த முகம்;
நஞ்சு முகம் நயவஞ்சகம் குடியிருக்கும் முகம்;
சிரித்தே பேசும் முகம்; சிரித்தே கழுத்தை அறுக்கும் முகம்;
சீறிப்பாயிது ஒரு முகம்;
சிந்திக்க வைக்கும் மறு முகம்;
கருணை முகம்,கணிவாய் பேசும் இந்த முகம்;
பணிவான முகம்; பாவனை பிடிக்குது நடனமாடும் முகம்;
பாவலா பாசாங்கு செய்யிது ஏமாத்து முகம்;
சிடு சிடு முகம், சீறிப்பாயிது இந்த முகம்;
கண்டதையும் பூசும் கண்ராவியான விகாரமான முகம்;
கண்ட உடன் பயத்தை தரும் கோர முகம்;
மூடி மறைக்கும் திருட்டு முகம்;
முறைக்கும் முகம்;
முட்டாளின் ஏமாந்த முகம்;
புதியமுகம் ஒரு அறிமுகம்;
பழைய முகம் பழகிய முகம்;
பாசத்தை கக்கும் முகம்;
ரோசக்கார முகம்;
முகத்தை காட்டாது வெடுக்கென்று திரும்பிக் கொள்ளும் ரோசக்கார முகம்;
வேசக்கார முகம், வேசம் போட்டே ஏமாற்றும் இந்த முகம்;
வாடி வதங்கிய முகம்;
வாய்விட்டு பேசாத முகம்;
பார்த்தே ஏங்கும் பரிதாப முகம்;
பார்த்தும் பாராமல் போகும் முகம்;
பகைகொண்ட முகம்;
ஏங்கியே வாடிய முகம்;
தூங்கியே வழியும் விடியா மூஞ்சி முகம்;
உணர்ச்சிகளை கொட்டும் முகம்;
முயற்சி செய்பவரிடம் காணலாம் சுறு சுறுப்பான முகம்;
பயந்தே பட படக்கும் பதறும் முகம்;
தெளிந்த முகம், தெரிந்தமுகம்;
முகஸ்துதி செய்தே காரியத்தை சாதிக்கும் முகம்;
பகைகொண்டு பழிதீர்க்க துடிக்கும் முகம்;
பயந்தவனின் கிளிபிடித்த முகம்;
பசியால் வாடிய முகம்;
பயந்தே பதுங்கும் முகம்;
கேலி செய்யும் முகம்;
கேளிக் குறியான முகம்;
மாய முகம்; மறைந்தே தாக்குது இந்த முகம்;
கோழையின் முகம், குழைந்தே காரியத்தை சாதிக்க துடிக்கும் முகம்;
ஆசை முகம் பாசை பழகும் முகம்;
முதிர்ச்சி கண்ட முகம்;
அதிர்ச்சி தரும் முகம்;
முரடனின் முரட்டுத் தனமான முகம்;
முகம் முகம்;
திரு முகம்;
திரு திரு என்று முழிக்கும் முகம்;
திருட்டு முகம்; கொடூர முகம் ;
வசிகர முகம்;
முகம் முகம்
உடலில் அமைந்த அழகுக்குடம்;
முகமே உன் அகக் கண்ணாடி;
கண்ணாடியில் ஒருமுகம்;
கண்முன் ஒருமுகம்;
இருண்ட முகம்; மறுண்ட முகம்;
இல்லை என்றே சொல்லாத இன்முகம்;
இரக்கம் கொண்ட கருணைமுகம்;
முதிர்சி அடைந்த முகம்;
முதுமையில் தளர்ச்சி அடைந்த முகம்;
கிளர்ச்சியில் பதரும் முகம்;
உனக்கு வேண்டும் அறிமுகம்;
வேண்டாதது அறியா முகம்;
ஆசைமுகம் பாசை பழகும்;
புண்படுத்தாத முகமே புகழுக்குறிய முகம்
முகத்தில் அணிய வேண்டும் புன்னகை;
அவதாரங்கள் பல எடுக்குது நமது முகம்;
அதிசயம் அர்புதப் படைப்பே இந்த முகம்;
பல பல வண்ணங்களையும் ; சித்திரங்களையும் வடிக்குது இந்த முகம்;
பச்சோந்தியாய் மாறிக்கொண்டே இருக்குது இந்த முகம்;
பவித்திரமானது பச்சகுழந்தையின் முகம்;
பாசம் ஒன்றையே தேடும் இந்த முகம்;
அன்னையின் முகம் அணைக்கத்துடிக்கும் இந்த முகம்;
ஆலயம் செல்லாமலேயே கருணையை வடிக்கும் அன்னையின் தெய்வீக முகம்
அன்பன் அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Apr-23, 9:48 am)
Tanglish : yeathanai mugankal
பார்வை : 140

மேலே