முடிவுரை ஒன்றே

'அழுது புரண்டாலும்
மாண்டோர் வாரார் '
உண்மை சொற்றொடர் !
பிறந்தவர் இறப்பது
இயற்கையின் கூற்றே !

வாழும்வரை மனிதனுக்கு
பெயருண்டு !
மூச்சடங்கிய சடலமானால்
பேருக்கும் மரணமன்றோ !

உடலென அழைப்பர்
ஊரும் உறவும் !
வாடிக்கை ஆனாலும்
வேடிக்கை அல்ல
கடந்து போவதற்கு !

வார்த்தைகள் என்றெண்ணி
யோசித்து சிந்தித்தால்
வாழ்வியல் தத்துவத்தை
வாழ்பவர் உணரலாம் !

பணம்பதவி பவிசென
அனைத்தும் இருந்தும்
உயிரற்ற மானிடரை
உடலென பிணமெனக்
கூறுவது வாழ்க்கை !

வாழும் வரை ஆடி விட்டு
ஆண்டு அனுபவித்து
சாதித்து காட்டியவர்
நாடென வாழ்ந்தவர்
நேரத்தை கழித்தவர்
வீடென இருந்து விட்டு
இடுகாடு சென்றவர்
எவருக்கும் என்றும்
முடிவுரை இது ஒன்றே !


🥹பழனி குமார்🤨
11.04.2023

எழுதியவர் : பழனி குமார் (11-Apr-23, 7:49 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : mudivurai ondrey
பார்வை : 181

மேலே