நட்பின் உதாரணம்

நட்பு என்று பேச்சு வரும்போதெல்லாம் பிசிராந்தையார் நட்பை எல்லோரும் பாராட்டிப் பேசுவர்.

நேரிசை ஆசிரியப் பாக்களில்

(1)
நட்புக் கோர்க்காட் டென்று காட்டுஞ்
சட்டெனத் தமிழ றிஞர்நல் உலகு
ஆந்தையார் தென்கீழ் பாண்டி பிசிரூர்
பிரபலம் அவரின் யானை புக்க
புலமெனும் கவிதையை யாராம்
போற்றார் தேடிப்படி புறநா னூறிலே



(2)
ஆந்தையார் புகழை கண்ட கோவில்
பெரியச் சோழன் பெருநட்பு கொண்டான்
ஆழ்மனத் திலேத்தான் வாழ்த்திச் செய்தி
பலதும் மன்னன் அனுப்பவும் மகிழ்ந்த
ஆந்தையும் மன்னன் பேரில் பாடல்கள்
பலதைப் பாடி யனுப்ப
இருவர் நட்பும் இப்படி வளர்ந்ததே


(3)
சோழனைக் காண ஆந்தையார் விழைந்தும்
சோழன் விழைவும் தூரக் காரணம் கடைசிவரைக் கண்டார் இல்லையே

(4)
மன்னன் மக்கள் இருவரும் அரசுக்
கட்டில் ஏறக் கடும்போட்டி நடத்த
மன்னன் தன்மனம் வெதும்பிச் சாகத்
திண்ணம் கொண்டான் வடக்கமர்ந்தான் முன்பின்
பார்த்திரா பிசிராந் தையார்க்கு
பக்கத்தில் இடத்தை செய்க வென்றாரே


(5)
மன்னரு டனமர் தோழரும் வியந்தார்
ஆந்தையார் மன்னர் கண்டா ரில்லை
மன்னரும் ஒருநாளும் கண்டார் இல்லை
யாமனை வரும் கண்டதில்லை
ஆந்தையார் வருவதே தெனசந்தே கித்தாரே

(6)
நாள்பல கடக்க பக்க மிருந்தோர்
கேள்வியை எழுப்ப ஆந்தையார் வருவார்
என்றான் தயங்கா மன்னன் அதிசயம்
சட்டென வந்த ஆந்தையார் பாய்ந்து
தழுவ ஓடி மன்னனை அணைத்தார்
கண்ணீர் ஊற்றென பெருக வியந்தார்
அண்மை அமர்ந்தோர் போற்றினர்
உலகு மொத்தம் நட்பென இதுவன்றோ



கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையார் நட்பு
நட்பு என்று பேச்சு வரும்போதெல்லாம் பிசிராந்தையார் நட்பை எல்லோரும் பாராட்டிப் பேசுவர்
பாண்டிய நாட்டிலிருந்த பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையார். மன்னரும் புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்ததில்லை. என்றாலும் உள்ளத்தால் ஒன்றுபட்ட நண்பர்களாக விளங்கினர்,


புலவரின் புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.

இதை அறிந்த பெருந் துயரடைந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு விலகி இருந்தது வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் ஆந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தைத்தைத் தொடர்ந்தார்.

பிசிராந்தையாருக்கு எப்படியோ சேதி கிடைத்து மனைவி குழந்தைகளுக்கு செய்ய வேண்டியன செய்து பிசிர் ஊரைவிட்டு காடு மலை கடந்து சில நாட்கள் கழித்து சோழன் வடக்கிருக்கும் இடம் சேர நண்பர் இருவரும் மார்புறத் தழுவி அன்பு பரிமாற்றம் செய்து கொண்டனர். பிறகு நண்பர் இருவரும் வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்பது நட்பிற்கு அடையாளமாய் இருக்கிறது.


y ........

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-23, 5:31 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : natpin utharanam
பார்வை : 575

மேலே