உடன்பிறவா உறவு நட்பு

பிறப்பதில்லை
உருவாகுவது நட்பு !
நீடித்து நிலைத்தால்
உடன்பிறவா உறவு
உண்மை நட்பென்பதை
உணர்வின் வெளிப்பாடு !
உணர்ந்தவர் அறிவர்
அறிந்தவர் போற்றுவர்
அனுபவத்தில் கண்டது !

நட்புடன் பழகி
ஞாலத்தில் உள்ளவரை
நண்பனாக உள்ளவர் சிலர் !
நட்டாற்றில் கைவிட்டு
அறுந்த பட்டம் போல
இடையில் செல்பபவர் சிலர் !

சுயநலமே கொள்கை என
எண்ணமுடன் பழகும்
நண்பர்கள் சிலர் !
தன்னலம் கருதாமல்
உடுக்கை இழந்தவன்
கை போல உதவும்
நண்பர்கள் சிலர் !

ஒருசேர செயல்படும்
விழி நீர் கசிந்திடும்
கண்கள் போல
இணைந்து இருக்கும்
நண்பர்கள் சிலர் !
அழுகின்ற நேரத்தில்
சிரிக்கும் நண்பர்கள்
சிலர் உண்டு !

காரியம் காரணம்
குறிக்கோளாக கொண்டு
முடிந்ததும் நட்பை
முறித்திடும் நட்பாக சிலர் !
பயணிக்கும் நேரங்களில்
நட்பாகி இடையில்
இறங்குபவர் போல
நண்பர்கள் சிலர் !

ஆழ்ந்த நட்பென்றும்
அகிலத்தில் பிரிவதில்லை !
சாதி மதம் அறியாது
உண்மை நட்பு !
உயர்வு தாழ்வு நிலை
காண்பது இல்லை
உளமார்ந்த நட்பு !

ஆய்வு செய்து இணைவது
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து கொண்டு
சமநிலையை நோக்குவது !
தேடி கிடைப்பதல்ல நாம்
நாடி செல்வதும் நட்பே !

துவண்டிடும் நேரத்தில்
இதயத்தை இதமாக்க
இளைப்பாறும் இடம்
இவ்வுலகில் நட்பு !
தோன்றி மறையும்
நீர்க்குமிழியாக அல்லாது
கரையைத் தொட்டு
மீண்டும் கடலை அடையும்
அலைகளாக இல்லாமல்
வானும் நிலவுமாக
குருதியும் உடலுமாக
நட்பின் இலக்கணத்தை
நன்னெறி தவறாது
காத்திடுங்கள் !


பழனி குமார்
19.04.2023

எழுதியவர் : பழனி குமார் (19-Apr-23, 11:07 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 286

மேலே