சமூகநீதி பேசும் சாராய பேரல்கள்
சமூக நீதி
படியளக்கும் ரேஷன் மத்திய அரசு
நேரிசை வெண்பா
சமூகநீதி என்பான் சமுசாரி போல
கமுக்கமாய் தந்தான்சா ராயம் -- குமுறும்
குடிகள் விதவை குடிக்கணவ ராலே
படியளக்கும் மத்தி யரசு
குடியை குடிக்கக் கொடுத்தது திராவிட அரசு
மக்களுக்கு ரேஷன் அரிசி கொடுத்து படியளக்கிறது
மத்திய அரசு
நேரிசை ஆசிரியப்பா
குடியைக் கெடுக்க குடியை கட்ட
விழ்த்து விட்ட கழக மின்று
பேசு வதேனிங் கேசமூக நீதி
சமூகம் கெட்டுக் குட்டிச் சுவராக்கி
சாராயம் தந்தவன் பேசுகிறான் சமூக
நீதி சமூகம் கெடுத்த மந்திரியின்
சாராய ஆலைகள் உதிரி கட்சி
யாரும் சாராய ஆலை மந்திரி
பற்றி சொல்லான் ஒருகுறை
அவனும் பேசுகிறான் சமூக நீதியே
.........