ஓர் உயிர் ஓவியம்

தென்றல் இதமாய் தழுவும்
இளங் காலை பொழுதினில்...

தேனமுதாய் வந்து இதமாய்
படர்வாள் என் நெஞ்சினில்...

பசுமையான நினைவுகள் அலை
போதும் இளம் நெஞ்சினில்...

ஆனந்தம் ஆர்பறிக்கும், அச்சம்
அகன் றிடும் நெஞ்சினில்...

நினைவு வானில் நிலவாய்
உலாவரும் தேவதை அவள்...

ஏக்கம் தேங்கிய விழிகளால்
வருடிச் சிலிர் பேற்றிடுவாள்...

செங் காந்தளாய் சிவந்து
சீர் குலைப்பாள் சிந்தையை...

என் மனதிற் கினிய
மாயக் கண்ணாடி அவள்,

எனையே பிரதி பலிக்கும்
ஓர் உயிர் ஓவியம்....

எழுதியவர் : கவிபாரதீ (25-Apr-23, 4:01 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : or uyir oviyam
பார்வை : 456

மேலே