வளர்த்த தெய்வம்

வளர்த்த தெய்வம்

ஏடெடுத்து படிக்காத மேதை நீ
ஏங்கித்தவிக்க விட்டுப் போன தெங்கே
காடு கொண்டு போனதா - இல்ல
சுடுகாடு தான் கொண்டு போனதா...

இரத்த பந்தம் இல்லாத வளர்த்த
பாசம் நெஞ் சடைக்குதே, அய்யா
தூக்கி வளர்த்த பாசம் உன்மனச
விட்டு போனதா, நான் வருமின்ன
நீ உடலவிட்டு போனது ஏன்...

காத்திருந்து கண்ணார காணலையே
கூடு விட்டு பிரியும் முன்ன
ஏம் மொகம் நினைவு வரலையா...?
நினை விருந்தா கூடுவிட்டு பிரியாம
காத்திருந்து கண்டிருப்ப, என்ன பாவம்
செஞ்சேன் உன் முகம் காண
கொடுத்து வைக்காத பாவியாகிப் போனேன்...

வாய்விட்டு நீ சிரிக்கும் அழகைக்
காண கண்ணு இரண்டு போதாதே,
நீ பேசும் மண்மனம் மாறாத
பேச்சை இனி எங்கே கேட்பேன்,
உன் வாயால் எம்பெயர் சொல்லி
கேக்கத் தான் இயலுமா இனி...

பாசம் சொட்டச் சொட்ட அழைத்தாயே
பெத்த தகப்பன் செத்தாலும், வளர்த்த
நீயும் தகப்பன் தானே யெனக்கு.
நீயும், விட்டு என்னைப் பிரிஞ்சது
தான் எம்மனசை விட்டு பிரியலையே....

எழுதியவர் : கவிபாரதீ (28-Apr-23, 5:23 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : valartha theivam
பார்வை : 274

மேலே