வேகம் விவேகமல்ல

எழில் கொஞ்சும் கன்னியர்கள்
நிலவாக ஒளிவீசும் முகமுடைய
செதுக்கிய சிலையாக வடிவுடைய
விழிகளில் தென்படாத இடையுடைய
மங்கையர் மண்ணில் காணலாம்
ஞாலத்தில் உலா வருவதுண்டு !

கண்டதுண்டு நான் பலரை
கண்கள் குளிர பாவயரை !
அவர்களின் கயல்விழி பார்வை
ஆனது எனக்கென நடைபாதை !
வீழ்ந்தது உண்டு நான் சிலமுறை
கடலில் தத்தளிக்கும் கட்டுமரமாக !

சிரித்தால் கொட்டும் சில்லறை
நடந்தால் அன்னப் பறவை !
சிந்தும் மோகனப் புன்னகையால்
பற்றி எரிந்திடும் மோகத்தால்
தாபமும் மாறிடும் தாகமாக
ஆவலைத் தூண்டும் அள்ளிப்பருக !

வேகம் கூடாது விவேகமல்ல
வேவுப் பார்த்த எனதுள்ளம்
ஆவேசம் கொண்டு தடுத்தது !
தடுமாற்றம் இல்லா தனிமனிதன்
ஏமாற்றம் என்றும் எனக்கில்லை
என்றும் அடியேனுக்கு சலனமில்லை !


பழனி குமார்
28.04.2023

எழுதியவர் : பழனி குமார் (28-Apr-23, 2:41 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : vegam VIVEGAMALLA
பார்வை : 82

மேலே