செவ்விதழ் சிவப்புத் தோட்டத்தில் வெண்பூக்கள்

செவ்வானம் சிவந்து செங்கதிர் பூக்கள்
செவ்விதழ் சிவப்புத் தோட்டத்தில் வெண்பூக்கள்
உவமைக்கு அப்பாற் பட்ட ஓவியங்கள்
பவள இதழ்களும் பளிச்சிடும் செங்கதிரும்
-----முதற்சொல்லோசையுடன் நாற்சொல்லால்
அமைந்த இயல்பு வரிகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பு பயில்வோர் பயன் பெற சில யாப்பெழில் தகவல்கள் பாக்கள்
செவ்வான் சிவந்திடச் செங்கதிர் செம்பூக்கள்
செவ்விதழ் செந்நிறத் தோட்டத்தில் வெண்பூ
உவமையை வெல்லும் உயர்சித் திரமாம்
பவள இதழ்செங் கதிர்
செவ்வான் சிவந்திடச் செங்கதிர் செம்பூக்கள்
செவ்விதழ் செந்நிறத்தில் பூவெண்மை -- செவ்வாய்
உவமையை வெல்லும் உயர்சித் திரமாம்
பவளயிதழ் செங்கதிரைப் பார்
----இரு விகற்ப இன்னிசை , நேரிசை வெண்பாக்கள்
எதுகைகள் ------செவ் செவ் ஒருவிகற்பம் உவ பவ இன்னொரு விகற்பம்
முதலடி மோனைகள் செ சி செ செ ----முற்று மோனை ---அனைத்து சீரிலும் மோனை அமைந்ததால் 1 2 3 4 ஆம் சீரில்
2 ஆம் அடி மோனைகள் செ செ தோ ---- 1 2 3 சீர்களில் கூழை வர்கமோனை
க ச ட த ப ற படி செ தோ வர்க்கங்கள்
3 ஆம் அடி மோனைகள் உ உ ---- 1 3 சீர்களில் இது பொழிப்பு மோனை
4 . ஆம் அடி மோனைகள் ப க --- 1 3 சீர்களில்
மூன்றாம் சீரில் பொழிப்பு மோனை வரும்படி எழுதுவது
தொல்லிலக்கியங்களில் வழக்கம்
நேரிசை வெண்பாவில் முதலிரண்டு அடிகளிலும் முற்று மோனை அமைந்திருப்பதை
கவனிக்கவும்