எந்த நேர்த்தி யின்றி எந்த வாய்பா டின்றி - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(தேமா 6)

எந்த நேர்த்தி யின்றி
..எந்த வாய்பா டின்றிச்
சொந்த மாகச் சொல்லிச்
..சொத்தை யாகச் சொல்லி
விந்தை யாகச் சொல்லி
.. விளையாட் டுந்தாங் காட்டி
நொந்து போகச் செய்வார்
..நோவும் மிக்க செய்வார்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-23, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே