மகள்..!!
அரும்பே என்
கரும்பு மீண்டும்
ஜனனம் எடுத்தேன்
உன்னால்..!!
என் உணர்ச்சிகளுக்கு
உருவம் கொடுத்தவளே
உன்னாலே மனிதன்
ஆனேன்..!!
உன் சேவை
என் தேவையை
மாறியது எனக்கும்
புன்னகைக்க கற்றுக்
கொடுத்தவளே..!!
நீபூக்க ஆரம்பித்தாய்
பொறுப்புகளை சுமக்க
ஆரம்பித்தேன் நான்..!!
என் மற்றொரு
தாயே மாறினாய் பிறவி பூர்த்தியாக்கினாய்..!!
மறுமணம் முடித்து
செல்கையில் குழந்தையாய்
பார்த்த உன்னை
நினைத்து பயந்ததுண்டு..!!
நீமழலை பெற்றிடு
மகனாய் நானே
வந்து பிறந்து
விடுவேன்..!!
பரமகுரு பச்சையப்பன்