காமம்.. 2
அவளுக்கு நீயும்
உனக்கு அவளும்
ஆடையாய்
மாறிக் கொள்வது
தான் காமம்..
இரவுகளில் தான்
வெளிப்படும்
அதிகம் நாணம்
இருவருக்கும்..
ஒருவருக்கு ஒருவர்
என உன்னதத்தை
கலைத்தது கலியுகம்..
சதைத் தின்னும்
கழுகாக சில
காளைகள் சுற்றி
வருகிறார்கள்..
தவறுகளில் இருந்து
தப்பி பிழைத்தவன்
தமிழன் ஏன் உமிழ்நீர் கொட்ட
வைக்கிறீர்..