சம்மதம் சொல்லடி
ஏரியில் நீந்தும் மீன் போன்ற விழிகள் என்னை பார்க்க
சேரியில் பிச்சைக்காரன் போல் துன்புறுகிறேன்
தேரிலே சிக்கிய புழுவாய் என் நெஞ்சினை நசுக்குகிறாய்
நேரிலே கண்ட தேவதை , என்னை மட்டும் வதைப்பது ஏன்
மாம்பழத்தின் வளைவு போல அவள் உதடுகள் குவிந்து சிரிக்க
காம்பாகன்ற பழம் போல் மரத்தில் இருந்து வலித்திட விழுகிறேன்
சாம்பலாய் ஆகிறேன் அவள் விழிகள் கக்கிய கோப கனலால்
தேம்பி இங்கு நான் அழுகிறேன் அவள் காதில் கேட்கவில்லையா
கம்பனின் வரிகளின் அழகை வையத்தில் உன்னில் கண்டேன்
பம்பரமாய் சுழன்ற என் இதயம் , சுற்றிவிட நீ இல்லை விழுந்துவிட்டது
அம்புயம் போல நீ சேறு என்னில் பூத்தது என்
சம்மதம் சொல்லடி உன் காதலுக்காக ஏங்குகிறேன்