வென்றவன் தோற்றான்

மரம் விளை நாட்டையும் மறம் விளை கோட்டையும்
ஆண்டவன் அரியணையில் வீற்றிருந்தான்
மூண்டிட்ட போர்களை மூச்சால் முடித்தவன்
காதல் போரிலே தோற்றிருந்தான்
எதிரியை கண்டதும் வெற்றி நமதே என்று
அவன் குரல் முழங்கியது
காதலியை கண்டதும் தண்ணீர் குளமாய்
அவன் இரு கண்கள் கலங்கியது
போர்வாள் முனையில் வீரத்தை காட்டி
எதிரிகள் பலரை கொன்றிட்டான்
எதிரி படையை நெற்கதிரென அறுத்து
வீரனாய் போரில் வென்றிட்டான்
போரில் வென்றவன் பாறையில் ஏறி
முரசம் கொட்டி களித்திட்டான்
காதலில் தோற்றவன் பேதையாய் மாறி
தன் நெஞ்சையே குத்தி கிழித்திட்டான்

எழுதியவர் : நிழல்தாசன் (22-May-23, 8:19 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 202

மேலே