உன்னை மடிமீது ஏந்துவேன் 555

***உன்னை மடிமீது ஏந்துவேன் 555 ***


உயிரானவளே...


என் இதயத்தில்
இருக்கும் உன்னை...

நீலவானத்தில் தேடுகிறேன்
நீ நிலவா நட்சத்திரமா என்று...

உன்
மீது நான்
கொண்ட காதலை...

வார்த்தைகள் கோர்த்து
உலகிற்கு சொல்கிறேன்...

கடலின் அலைபோல
சீறி பாய்ந்தாலும்...

உன்னை கரை போல
என் மடிமீது ஏந்துவேன்...

ஏந்திய உன்னை உன்
பூ மு
கமெங்கும் முத்தமிடுவேன்...

காற்றோடு கவிபாடும்
உன் கருங்கூந்தலை...

என் விரல்களா
ல்
கோதிவிட ஆசையடி...

நீங்காத காரிருளில் தினம்
விண்ணில் பூக்கும் நட்சத்திரமே...

விண்ணில் அழகாய் ஜொலிக்கும்
விடிவெள்ளி நீ தானோ...

என் மனதை
அலங்கரிக்க பிறந்தவளே...

ன் வாழ்வினை என்று நீ
அலங்கரிக்க போகிறாய் கண்ணே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (24-May-23, 5:25 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 223

மேலே