கல்கண்டான காதல்
கைவளைகள் கலகலக்க
காதணிகள் காற்றிலாட
கொலுசுகள் சப்திக்க
கண்கள் மருள
காரிருள் கூந்தல்
கம்பி இழைகளாய்
காற்றில் பறக்க
கடந்தாள் மடந்தை
கடைவிழி பார்வையில்
கணைகள் தொடுக்க
கள்ளூறும் காதல்
கடலாய் மனதில்
கரைபுரண்டு ஓட
கண்களால் பேசி
கடிதங்களில் தொடர்ந்து
கைகோர்த்து நடந்து
கனவுகளை சுமந்து
காலங்கள் கடந்து
கல்யாணக் கோலம்
கண்டோம் இனிதாய்
குழந்தைகள் பெற்றோம்
கற்று உயர்ந்தனர்
கரை கடந்தனர்
கணவன் மனைவி
காதலர்களானோம் மீண்டும்
கல்கண்டாய் இனிக்கிறதே
கடந்த காதலைவிட
காதலின் முழுமை இதுவே !!!