உனக்குள் நான் எனக்குள் நீ

இமையாக நான்
உன் கண்களை காப்பேன்
அறுசுவை உணவாக நான்
உன் இதழ்களினால் என்னை
ரூசித்து பசியாற்றுவேன்
புத்தகமாக நான்
உன் கைதீண்ட காத்திருப்பேன்
உடையாக நான்
எந்நேரமும் உன்னுடன்
ஒட்டியிருப்பேன்
காலணியாக நான்
என்றும் உன் பாதங்களை
பாதுகாத்து
காலம் உள்ளவரையிலும்
உனது காலடியில் நான்
கிடப்பேன்
உடலாக நான்
உயிராக நீ
உனக்குள் நான் எனக்குள்
நீயென
ஒருவருக்குள் ஒருவராய்
ஒன்றிணைந்து
உலகில் வாழ்வோம்!!!