இரக்கமில்லாத இறைவன்

உன் நினைவுகளோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்..!
நிஜத்தில் நீ இல்லை என்பதை ஏற்க மறுத்து..!
ஏன் என் கண்முன் வந்தாய் காலமெல்லாம் என்னை கண்ணீர் விட செய்வதற்க..!
உயிரை மட்டும் விட்டுவிட்டு என் உலகத்தையே உன்னோடு கொண்டு சென்றுவிட்டாய்..!
இதற்கு நீ என்னை கொன்று சென்றிருக்கலாம் நொடி பொழுதில் மடிந்திருப்பேன்..!
இப்படி என்றும் ஆறாத காயங்களை என்னிடத்தில் விட்டுச்சென்று விட்டையே..!
காலமெல்லாம் உனக்காக காத்திருக்க நினைத்தேன் காதலோடு..!
இப்போது என் காலம் என்று முடியும் என்று காத்திருக்கிறேன் கண்ணீரோடு..!
நான் என்ன பாவம் செய்தேன் இப்படி பலநூறு ஈட்டிகள் இதயத்தை துளைக்கிறதே..!
காதலித்தது பாவம் என்றால் இந்த இரக்கமில்லாத இறைவன் ஏன் என் கண்முன் உன்னை காட்டினான்..!

எழுதியவர் : த.பிரவின் குமார் (26-May-23, 6:33 pm)
சேர்த்தது : பிரவின் குமார் த
பார்வை : 89

மேலே