கண்ணே
கண்ணே....!
கண்ணே....;உன்னை
இறுக அணைக்கையில்
இதழ் கவ்விச் சுவைக்கையில்
தேன்மதுவில் மயங்கி சரிகையில்
நம்மிடையே
காற்றும் புகாது...இடைவெளி
சற்றும் கொடாது
ஈருயிர் ஓருடலாய்
பிணைந்து கிடந்த
அந்த சொர்க்க நிமிடங்களில்
சுற்றும் பூமியும்
சற்று நின்று நிதானித்து சுற்றியதே...!
வெண்ணிலவும் மேகத்தில் ஒளிந்து
ஓரக்கண்ணால் கண்டு புன்னகைத்ததுவே...!
உன்னுடல் வாசம்
என்னுடல் வாசத்தோடு கலந்து
புதுவாசமாய் சங்கமித்து என்னுயிரில்
கலந்ததுவே...!
கண்களைப்பற்றி பாவலர்பாடிய
கவி கோடியில் இருக்க - உன்
கண்கள் பாடிடும் கவிதைகளோ
என்மனக் கோவிலில் இருக்க
பாவலர் பாடியதெல்லாம் இந்த
பாருக்கு சொந்தம் - உன்
கண்கள் பாடியதெல்லாம் எனக்கு
மட்டும்தான் சொந்தம்.
மூக்கும் மூக்கும் உரசுகையில்
மூடிக்கிடந்த உணர்வு எரிமலை
வெடித்து சிதறிய வெப்பம்
உன்னையும் என்னையும் பொசுக்கி
வியர்வை ஆற்றில் முழ்கச் செய்ததுவே...!
ஓ...
அந்த நொடி ஒன்று போதுமடி
நான் வாங்கி வந்த வரம் முழுதும்
முழுதாய் நிறைவேறி
என் மனம் அமைதியானதுவே ...!