பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)
('ப' மோனை, ய்’ இடையின ஆசு, ‘ம்’ எதுகை)
பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ(து)
இம்ப ரீடில1 தௌதய மென்பதே! 5
- நாட்டுச் சிறப்பு, முதற் சருக்கம், யசோதர காவியம்
பொருளுரை:
பொன்மலையாகிய மகாமேருவினை (நடுவில்) உடைய நாவலந் தீவின் தென்பாலிருக்கிற,
பரதகண்டத்தில் (எவ்வுயிரும்) விரும்பும் நீர்வளத்தால் அழகு பெற்றநாடு,
மணமிக்க உயர்ந்த சோலை வாயு மண்டலத்தினிடையே சென்று சிறந்த மேகம் தன் தவழ விளங்குவதும்,
இம்மண்ணுலகத்து வேறு நாடு தனக்கு ஒப்பில்லாததுமான ஒளதேயம் என்று சொல்லப்படுவது ஒன்று உண்டு!
ஒளதேயம் என்ற நாடு, இந்நிலவுலகத்தே ஒப்பற்று விளங்கிற்று!
1 விம்பரீடில – பாட பேதம்