நலங்கிடவோ நானின்று நன்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சலங்கையணிப் பெண்ணவளின் சாந்தநடை கண்டேன்;
அலங்காரத் தேரோ அழகு – நிலவோ?
உலவும் அவள்கழுத்தில் ஓர்தாலி கட்டி
நலங்கிடவோ நானின்று நன்கு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-23, 8:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே