காதல்

நெஞ்சே..நெஞ்சே...
××××××××××××××××××
கண்ணால் திருடி
குருதிக்குள் கடத்தி
இதயத்தில் சேர்த்திட
உள்ளம் உன் வசம்

உன் நினைவும்
என் நினைவும்
ஒன்றாகிட நினைவுகள்
கலைந்திடயென் நினைவுகள் நீயானாய்

நெஞ்சே நெஞ்சே
காதலில் நிலைத்துவிடு
சாதி மதம்
தடைவிதித்தால் தயங்கி துவழாதே..

காதல் என்பது தனிசாதி
காதல் என்பது தனிமதம்
காதலுக்கு தனிமொழி மெளனமொழி
காதல் உயிரோடு கலந்த உயிரோட்டம்

காதல் நல்லதோர் தனியாட்டம்
காதலை ஓட வைப்பது பிழையாட்டம்
காதலால் பெற்றோர் சம்மதமில்லாதது தப்பாட்டம்
காதலை பிரித்தால் மரனாட்டம்

காதல..காதல்..காதல்...
என்றென்றும் காதல்
முடிவில்லா காதல்
ஒற்றுமைக்கு விடிவெள்ளி காதல்..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 4:31 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 43

சிறந்த கவிதைகள்

மேலே