சீவி முடிக்காத சிங்காரி

சீவி முடிக்காத சிங்காரி
*****************************

கோதி விடும் கூந்தலை
மோதி பார்த்த தென்றல்
நுகர்ந்த வாசம் மயக்கியது
நகர்ந்து சென்று திரும்பியது !
இயற்கை அளித்த வரமா
செயற்கை வழி வந்ததா
விவாதம் இங்கு தேவையன்று
பிடிவாதம் நமக்கு எதற்காக !

அலங்கார பொருட்கள் தரும்
சிருங்கார சிகைக்கு அழகும்
சிங்கார சிலையாக காட்டும்
சீவி முடிக்காத சிங்காரிக்கும் !
நவீன காலத்து நாகரீகமானது
ஆதிகாலம் மீண்டும் திரும்புது
மோகம் கொண்ட பெண்கள்
தாகம் எடுத்த பறவைகளாகுது !

அலங்கார பொருட்கள் பலவும்
வீதிகளில் விற்பனை எங்கும்
எளியவரும் விரும்பும் அதனை
துளியேனும் நாடுவது இதனை !
ஆடைகள் குறைவது வாடிக்கை
ஆண்கள் பார்ப்பது வேடிக்கை
அள்ளி முடிக்கின்ற கூந்தலை
அவிழ்த்து விடுகின்ற வேதனை !


பழனி குமார்
13.06.2023

எழுதியவர் : பழனி குமார் (13-Jun-23, 9:00 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 195

மேலே