துன்பந்தருமே துயர் - பஃறொடை வெண்பா
பணமதின் சேர்க்கை தினசரி வாழ்வை
மலையள வாய்மாற் றிடினிலே வேண்டுமே
நம்மின் நடவடிக் கையின் செயல்பற்ற
வேண்டிய நல்வழக்கம் எல்லோ ருடனும்
இயைந்ததாய் செல்லலே அஃதின்றி செல்லுங்கால்
இம்சையைத் தந்திடும் பின்நாளில் பல்வகையில்
துன்பந் தருமே துயர்
—- நன்னாடன்.