வன்மம் தவிர்
வன்மம் தவிர்
+++++++++++!
ஆறறிவு மிருகத்திடம்
அறியாத ஐந்தறிவு/
யானைப் பசியால்
யாசகம் தேடிட /
மனிதமற்ற அறிவுடையான்
மிருகமாக மாறி /
அன்னாச்சிப் பழத்துக்குள்
அபாயகரமான வெடியை/
உள் வைத்து
ஊட்டிடவே உணவென்று /
கரியும் வாயிலிட
கரிமருந்து வெடித்திட /
உணவு உட்கொள்ள
உதவவில்லை வாய் /
பசியாலும் வேதனையாலும்
பரலோகம் அடைந்தது /
இதுபோன்ற வன்மம்
இல்லாத உதவிகளை /
செய்திட முயலுங்கள்
சிறப்புடன் வாழுங்கள்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்