அவள் ஏறிட்டது உனை முத்தமிட்டது யெனையே அப்பா 1
தன்உயிரில் இருந்து ஓர்அணுவை தந்து, அவ்வணுவை அடைகாக்கும்
அன்பு மனையாளை மனதில் தாங்கி
ஆதரவாக கரம் பற்றி, சிரம் கோதி
சீக்கிரம் வருவேன் அந்தியிலே யென தினமும் பொய் உரைத்து
அலுவலில் அகிலம் மறந்து, மசக்கை
மனைவி ஞாபகம் தாமதமாக வர
தனை மறந்து காத்து கிடக்கும் கண்
அப்பெண் யென ஓடி வந்தாயோ
யெனை நாடிவந்தாயே ,நான் கருவாக இருக்கையில்
உள்ளம் மகிழ்ந்த நான் உதைத்தேன்
யென் அன்னையை ஓர் உந்தலில்
அடிவயிற்றில் கைவைத்து அணைத்தாய் எனையையே
அகமகிழ்ந்தாள் அன்னையே
பேணிக் காப்பதில் பெற்றவளுக்கு
இணை நீயே ... ஆயினும் வலி வந்து
யெனதுஅன்னை தான் துடிக்க
ஒன்றுமில்லை... அச்சம் வேண்டாம்
ஆதரவாக நானும் துணையாக
தும்பிக்கையான் தம்பியும் என
நம்பிக்கை ஊட்டி உள்ளே அனுப்பி
மருத்துவமனை வெளியே வெளிறிய
முகம் கொண்டு மனதிலே
திடம் கொண்டு வணங்காத இறையையும் வணங்கி, அறையைநீ
உற்று நோக்கையில் வந்து உதித்தேன் நான்...
எனைஏந்தி செவிலியர் காட்ட
தன்நிலை மறந்து தண்ணீர் வந்தது
கண்களில்... கண்ணீர் அடக்கி தான்
தேடி ஓடியது தன் கண்ணாளளை
அவள் ஏறிட்டது முதலில் உனையே
முத்தமிட்டது யெனையே
அப்பா... நீ அப்பப்பா... அல்லவா
இன்னும் வருவேன்
இமைக்காமலே...