உணவினைப் பகிர்ந்தால் உண்டோர் மகிழ்வர் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் மா மா மா)

உணவினைப் பகிர்ந்தால் உண்டோர் மகிழ்வர்;
பிணமென வீழ்ந்தால் பிறருந் தீண்டார்!
மணந்தவர் பிறந்தோர் மகிழ்ந்தே புதைப்பர்;
குணமிலா தவனுங் கூற்றாய்ப் பிணமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-23, 7:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே