குறுங்கவிதைகள்
அ.
அலைகள் கூட
என்னிடம் கேட்குதடி...
உன்னவள் எங்கென்று ?
எப்படி சொல்ல
நீ இன்னொருவனுக்கு
மனைவியானதை...!
ஆ.
என்னைபோல் அலைகளும்
உன் பெயரை உச்சரித்துக்கொண்டே
நீ நின்ற இடத்தைத்
தொட்டுவிட்டு செல்கிறதே
ஏன்?
என்னிடம் சொன்னதுபோல்
அலைகளிடமும் சொல்லிவிட்டாயா
காதலிக்கிறேனென்று...!
இ.
அன்பே நீயும்
பங்குசந்தை போலத்தான்
நேற்று
சந்தோசப்பட வைத்தாய்
இன்று
சங்கடப்பட வைக்கிறாய்...!
ஈ.
நாம் இருவரும்
கைகோர்க்காமல்
கடற்கரையில்
கடந்துசெல்லும்
தருணங்களில்
அலைகள் கூட
கோபித்துக்கொண்டு
உள்வாங்கி கொள்கிறது...!