தென்றல் உன்மேனியைத் தழுவினால்

தென்றல் மலர்களைத்
தழுவினால் அது இயற்கை
தென்றல் உன்மேனியைத்
தழுவினால் அது ஆசை

அலைகள் கரையைத்
தழுவுவது இயற்கை
அலைகள் உன்கால்களைத்
தழுவுவது ஆசை

அருவி பூமியை
நனைப்பது இயற்கை
அருவி உன்னழகுமேனியை
நனைப்பது அதன்
அளவில்லா ஆசை

கவிஞன் இயற்கையைப்
போற்றுவது மரபு
கவிஞன் உன்னெழிலை
கவிதையில் போற்றுவது
அவனுக்கு சிலிர்ப்பு

எழுதியவர் : கவின்சாரலன் (24-Jun-23, 5:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே