எட்டு மொழிப் பெயர்

டேய் மகனே உன் பையனுக்கு நீ வச்ச பேரு இன்னிக்கு அவன் உலகப் புகழ் பெறுகிற தகுதிக்கு அவனை உயர்த்தி இருக்குது.
@@@@@@@
என்னப்பா சொல்லறீங்க?
@@@@@@
நான் என்னடா சொல்லறது. உலகத்தில் உள்ள அத்தனை தொலைக்காட்சிகளும் சொல்லுதுடா மகனே.
@@@@@@@
என்னப்பா குழப்பறீங்க?
@@@@@@@
நம்ம துள்ராஜ் எங்கடா?
@@@@@@
என்னப்பா தெரியாத மாதிரி கேட்கறீங்க?
ஒலிம்பிக் போட்டில கலந்துக்க சீனாவுக்கு அவன் போனது உங்களுக்குத் தெரியாதா?
@@@@@@@
நானும் அதத்தான்டா சொல்லறேன். துள்ளித் துள்ளித் குதிச்சு வேகமா ஓடி இரண்டு உயரமான கம்பிகளுக்குக் இடையே வச்சிருக்கிற குச்சியைத் தாண்டிக் குதிக்கிற உயரம் தாண்டுதல் போட்டில நம்ம துள்ராஜ் அதிக உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வாங்கிட்டான்டா. இந்த வெற்றிக்கு நீ துள்ராஜ்-னு வச்ச
அவன் பேரு ராசிதான்டா காரணம்.
@@@@@@@@
என் மகன் துள்ராஜ் ஒலிம்பிக்ல தங்கப் பதக்கம் வாங்கிட்டானா? ரொம்ப மகிழ்ச்சி அப்பா. துள்ராஜ் சாதாரண பேரு இல்லை. பல நாள் பல இணைய தளங்கள்ல தேடி நான் கண்டுபிடிச்சு வச்ச பேரு துள்ராஜ். இந்தப் பேரு. மொத்தம் எட்டு மொழிகளில் இருக்குது. தமிழரின் தற்கால நாகரிகப்படி
இந்தப் பேருக்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை.
@########
மகனே 'ஆசீர்வாத்'து நீ மகா புத்திசாலிடா.
@@@#@@@@@@@@@@@@@@@@@#@##
Tulraj = Bold. Latin, English, Hebrew, Turkish, Egyptian, Indian, Spanish, Arabian origin.

எழுதியவர் : மலர் (24-Jun-23, 9:29 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 73

மேலே