பணம் சேர்க்கத்தான் கட்சி

அப்பா, நீங்கள் நம்ம கட்சிக்கு நிரந்தரத் தலைவர். நான் நிரந்தரம் பொருளாளர். நம்ம கட்சி குட்டிக் கட்சி. நாம் தனிச்சு நின்று ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியல. கட்சியைக் கலைச்சிடலாமா?
@@@@@@@
போடா முட்டாள். நமக்கு தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் இல்லடா. நமக்குத் தேவை முடிஞ்ச வரை கறக்கிறது.
@@@@@@
ஓ... அதுக்குத்தான் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறுதலா?
@@@@@@
ஆமான்டா. எந்தக் கட்சிகூட கூட்டணி வச்சா அதிக இலாபமோ அந்தக் கட்சிகூட கூட்டணி வைக்கிறதுதான் கூட்டணி தர்மம். அது இல்லாமல் கட்சிக்கு நிதி வசூல் பண்ணி பணத்தோட்டத்தையே உருவாக்கிக் டோம். நிதி வசூல். தேர்தல் வேட்டை. இதுவே நம்ம மறைமுகக் கொள்கை. மக்களுக்கு தொண்டு செய்வதாகப் பிரச்சாரம் மட்டும் செய்வோம். இதுதான்டா மகனே எனக்குத் தெரிஞ்ச அரசியல்.
@@@@@@@
நன்றி அப்பா.

எழுதியவர் : மலர் (27-Jun-23, 12:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 70

மேலே