எங்கள் கட்சிதான் பிரபலமான கட்சி

நிருபர்கள் சந்திப்பு:
ஐயா, உங்க கட்சிதான் பிரபலமான கட்சினு சொல்லறீங்களே அதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
@@@@@@
எங்கள் கட்சியை பிரபலமான கட்சியாக மாற்றியதே நிருபர்கள் தான் காரணம்.
@@@@@@@@@
நாங்களா? எப்படி?
@@@@@@
நீங்கள் வெளியிடற செய்திகள்? வன்முறை, திருட்டு, கொலை, கடத்தல், கற்பழிப்பு, வங்கிக் கொள்ளை, நகைக்கடை கொள்ளை, திருட்டு, மணல் கடத்தல், சொத்து அபகரிப்பு, போதைப் பொருள்களை கடத்தல், அவற்றை விற்பனை செய்தல் -- இதையெல்லாம் தானே செய்தியும் போடுறீங்க?
###########
பரப்பரப்பான செய்திகளைத் தான் ஐயா மக்கள் விரும்பறாங்க.
@@@@@@@
சில செய்தித்தாள்கள் வதந்தியையும் செய்தியாக போடறாங்க. இதெல்லாம் என்னோட தலைமைல செயல்படற கட்சி வளர்ச்சிக்கு ரொம்ப உதவியாக இருக்குது நிருபர் நண்பர்களே!
@#@@#@#@
என்ன ஐயா சொல்லறீங்க?
#@@@#@@@
எங்க கட்சில குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிரபலமா இருக்கிறவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கட்சில சேர்த்து அவர்களுக்கு முக்கியமான பொறுப்புக்களைக் கொடுத்திருக்கிறோம்.
வேற எந்தக் கட்சியானது இதுபோல் நடைமுறை இருக்குது? முகவரி இல்லாத நபர்கள் எங்க கட்சில இல்லை. அடிக்கடி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகளில் பரபரப்பான செய்திகளுக்கு ஆளான நபர்கள் தான் எங்கள் கட்சில பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள். 'பல்லு பாஸ்கரன'னு சொன்னா உலகத் தமிழர்களுக்கு தெரியும். இவர்தான் எங்கள் கட்சியின் பாதுகாப்பு பாசறைத் தலைவர். இவர் மீது ஆதாரங்கள் இல்லாத ஐம்பது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்குது. இவரைஜமாதிரி தான் எங்கள் கட்சியில் உள்ள மற்ற பிரபலங்கள். இப்படம் சொல்லுங்க எந்தக் கட்சி பிரபலமான கட்சி?
@#########@
நிருபர்கள் அனைவரும்: உங்கள் கட்சி தான் ஐயா. அசுர வளர்ச்சி மூன்றே ஆண்டுகளில்.

எழுதியவர் : மலர் (30-Jun-23, 8:58 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 42

மேலே