காலமெல்லாம் உன்னருகில் நான்

காலமெல்லாம் உன்னருகில் நான்
++++++++++++++++++++++++++++
காலம் : 1945
இடம் : அந்தமான்

பிரிட்டிஷ் அரசை வீழ்த்தி ஜப்பான் வசமான அந்தமானில் அப்போது அங்கு வாழ்ந்த மக்களை சிறுக சிறுக கப்பலில் ஏற்றி கொடுமை செய்து நடுக்கடலில் தள்ளி விடுவது வழக்கம்..

அப்படிக் கப்பலேற்றப்பட்ட தருணத்தில்,வாடிவிடுவோமென தெரிந்தும் பூக்கும் மலராக, அந்தக் கப்பலில் சாவின் விளிம்பில் ஒரு காதல் மலர்கிறது.

மொட்டு இதழை விரித்து மலர்ந்து தேனெடுக்க வண்டுகளை தேடுவதாக கப்பலில் கன்னிப் பருவ பெண் அமுதாவின் பார்வை கப்பலை நோட்டமிட்டபடியே இருக்க...

வலையில் சிக்கிய மீனாக கண்விழி கைதியானன் பிரபு..

மதுரையை எரித்த கண்ணகியின் மறு பிறப்போ இவள்..தலைவிரி கோலத்தில் கோபத்தில் தீப்பிழம்பாக கண்ணங்கள் சிவக்க தன்னையே பார்க்கிறாளே ..

ஊசியின் நூனி போன்ற அவளின் பார்வை தைத்தது காதலாக இதயத்தை அவளின் இதயத்தோடு..சே காதலாக இருக்காது...

சஞ்சிவி மலையை பெயர்த்தெடுத்த அனுமான் போன்று புசம் கொன்றவனே,ராவணனிடமிருந்த சீதையை மீட்டெடுத்தது போன்று ஜப்பானியக் குரங்குகளை வேட்டையாடி நம்மை மீட்டெடுப்பான என அவள் ஏங்குவதாக தெரிகிறுதே...அவளின் அந்தப் பார்வையென காளைகளிடம் அகப்பட்டவனாக கலங்கிய மனத்தோடு குழப்பத்தில் பிரபு நின்றிந்தான்..

விழிகள் பார்வை விளக்கைத் தூண்டும் தூண்டுகோலாகத் தூண்டிக் கொண்டிருந்தது மெல்ல இருவரிடமும் காதலை...

அமுதா,பிரபு காதல் சில நாட்களிலே வானவில்லாக வண்ணங்களை விரித்து வளர்ந்து அழகாக மின்னத் தொடங்கியது

மலரைத் தின்னும் புழுவாக ஜப்பானி வீரன் ஒருவன் அமுதாவின் கற்பைச் சூராட பாய்ந்தான்..

குஞ்சுகளைத் தூக்க வந்த கழுகை கண்டு சிறகை விரித்து சீறி எழுந்த கோழியைப் போல சிலிர்த்தெழுந்து ஜப்பானிய வீரனின் கழுத்தை இறுக பிடித்தவாரு..
" பெண்ணின் கற்பை சூராடும் கோழையே யாரின் உடலை தீண்ட நினைக்கிறாய் ,வெள்ளையனை விரட்டி அடித்த வேலு நாச்சியாரின் வம்சமடா நான் ..இதோ பார் உன்னை தும்சம் ஆக்குகிறேன்' எனக் கூறியவாள் அவனது கழுத்தின் முன்பகுதியை வாயல் கவ்வ ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான்..

இதைக் கண்ட ஜப்பானிய வீரார்கள் அவளை சுற்றி வளைத்து சூராட பாய்ந்த தருணத்தில் தலைமை வீரன் அமைதி அமைதியென்றவன்..

' அமெரிக்கா நம் நாடன ஜப்பான் மீது குண்டு போட்டதால் ஜப்பானிய அதிபர் வீரர்களை நம் நாட்டுக்கு திரும்ப அழைத்துள்ளார்..என்று கூற கப்பல் அந்தமானை நோக்கித் திரும்பியது...

ஜப்பானியரிடமிருத்து விடுதலையான காதலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் ஆம் வாழ்க்கையெனும் அழகிய சிறையில் காலமெல்லாம் உன்னருகில் நானென்று..

சுபம்...

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

பின்குறிப்பு : இக்கதையின் விரிவான கதையை வெள்ளித்திரையாகோ. சின்னத்திரையாகவோ இயக்க விரும்புவோர் கருத்து தெரிவிக்கவும்..நன்றி

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (1-Jul-23, 7:00 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 416

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே