எனது ஆலயம்
எனது ஆலயம் :
############
மேலக்கலங்கலில் புனிதர் குழந்தை தெரேசாளின் இறைசாட்சி அற்புதங்கள்:
இறைசாட்சி : 1 புனிதர் குழந்தை தெரேசா தன் தலையில் பெரும் மின்லையும் இடியையும் வாங்கித் தாங்கிக்கொள்ளுதல்...
1970 களின் பின்பகுதியில் பெரும் இடியொன்று ஊரில் விழந்திடத் தயரான போது அன்னை புனிதர் தெரேசா .."இறைவா என் மக்களைக் காப்பாற்றி அவ் இடியை தன் தலையை தாக்கும்படியாக செய்தருளும் " யென இயேசுவிடம் அன்னை வேண்டிட..
மேலக்கலங்கல் மக்களை தாக்குவதற்கு தயரான அந்த பொல்லாத மின்னலையும் இடியையும் .அன்னை புனிதர் தெரேசா தன் தலையில் வாங்கிக் கொண்டால்..
மேலக்கலங்கல் புனித திருத்தல கட்டிடத்தின் மேலிருந்த சிலுவையின் வாயிலாக அந்த இடி அன்னையின் தலையில் விழுந்து ..அன்னை திருவுருவத்தில் தலை மட்டுமே பாதிக்கப்பட்டது...மற்றப்படி சேதராம் எதுவும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது...
அந்த இடி ஊருக்குள் விழுந்திருந்தால் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திருக்குமென்று அன்றை பெரியோர்கள் தெரிவித்தனர்....
உண்மைக்கான ஆதராம் :
1) பெரிய கட்டிடங்களை இடி தாக்கும் : மேலக்கலங்கல் ஆலயம் உயரத்தில் சிறியதே ஆகையால் இயற்கையாக தாக்க வாய்ப்பில்லை..
2) இடியும்மின்னலும் வானத்தில் உருவாக மேகங்களிடையே உள்ள மின் சக்தி யே காரணம் அவைகள் உருவாகும்பொழுது மின் சக்தி பூமியை நோக்கி இறங்கும் அப்பொழுது மின்சக்தி உயரமான இடங்களில்முதலில் இறங்க முயற்சிக்கும் பொதுவாக் மின்சக்தி பாய ஒரு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் முனைகள் தேவை மேலும் அம்முனைகள் ஈரமாக இருப்பின் மின் சக்தி பாய்வது எளிதாகும் கட்டிடங்களின் மேற் பகுதியில் ஈரம் இல்லாமல் இருக்கும் கட்டிடங்ளில் ஈரம் இல்லாமை மற்றும் இடி தாங்கிகள் பொருத்தப்பட்டு இருப்பதால் பாதிப்பு ஏற்படாது ..
மேற்கூரிய கூற்றின்படி மேலக்கலங்கல் ஆலயம் நாட்டு ஓடினால் ஆன கட்டிடமே ..அதில் ஈரம் தங்கிருக்க வாய்ப்பில்லை ..
மின்னலை ஈர்க்கும் இரும்பு மற்றும் உலோகம் ஆலயத்தில் மேற்கூரை மற்றும் உட்பகுதியிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
3)புனிதர் தெரேசா திருவுருவச் சிலையானது உலோகத்தால் ஆனாதும் இல்லை..பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலைவையால் செய்யப்பட்டது அவை மின்சாரத்தை கடத்துபவை அல்ல..
4)இடிதாங்கி எதுவும் அமைக்கப்படவில்லை ..
ஆகவே இந்நிகழ்வு முழுக்க முழுக்க அன்னையின் அற்புதமே..புனிதர் தெரேசாவின் இறைசாட்சியே ஆகும்..
மின்னல் தாக்கிப் பாதிக்கப்பட்ட புனிதர் தெரேசா திருவுருவத்தை பெரியோர்கள் பாதுகாத்த வந்த நிலையில் 1987 களில் அதன் அருமை தெரியாத ஆலய நிர்வாகத்தினர்..ஆலயத்தின் வலது புறத்தில் குழி தோன்றிப் புதைத்து விட்டனர்..
புனிதர் தெரேசாவின் அத்திருவுருவச் சிலையை மீண்டும் தோன்டி எடுத்து தனிக் கெவி அமைத்து பாதுகாக்க ..ஆலயத்தின் தற்போதைய நிர்வாக வழிகாட்டி சித்தப்பா.திரு.கோழி.ஜே. அந்தோணிராஜ் அவர்களும் ஆலய விசுவாசிகளும் மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்
தொடரும்...
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்