எனது ஆலயம்

எனது ஆலயம்
$$$$$$$$$$$$$

மேலக்கலங்கலில் புனிதர் குழந்தை தெரேசாளின் இறைசாட்சி :

இறைசாட்சி : 2 புனிதர் குழந்தை தெரேசா புன்னகையுடன் கண் திறந்த காட்சி

3.10.2017 அன்று புனிதர் .குழந்தை தெரேசாவின் இயல்பான சுருபத்திலிருந்து புன்னைகயுடன் கண் திறந்த பார்த்த சுருபாத்தின் காட்சி தந்தது அன்னையின் உன்னதம்..

உண்மைத்தன்மை : 1) இது ஒரு கற்சிலை அல்ல உளியால் மாற்றி அமைக்க..

2) சிறிய மின் மோட்டர் இணைப்போ மின் இணைப்போ.. மின்கலமோ சிலையில் பொறுத்தவில்லை...

முழுக்க முழுக்க அன்னையின் திருமுக மாற்றம் அன்னையின் இறைசாட்சியே..

இறைசாட்சி : 3

1990 களிலே ஆலயத் திருவிழாவின் போது புனிதர் குழந்தை தெரேசாள் தேரில் ஊரைச் சுற்றி பவனி வந்தபோது மேலக்கலங்கலின் கிழக்கு எல்லையின் காவல் தெய்வங்களான சுடலை மாடசுவாமி கோவிலின் முன்பாக தேர் வந்தபோதும்..

ஊரின் தலையம்மன் கோவிலின் முன்பாக தேர்பவனியில் புனிதர் . குழந்தை தெரேசா வந்தபோது புனிதர் .குழந்தை தெரேசா முகம் மாறியதாகவும்..அக்கா தங்கையாக புனிதர் குழந்தை திரேசாவும் தலையம்மனும் பரஸ்பரம் பேசிக் கொண்டாதாகவும்

இதே போல் சுடலை மாடனும் புனிதர் . குழந்தை தெரேசா அண்ணன் தங்கையாக பரஸ்பரம் பேசிக் கொண்ட மகிழ்வில் அன்னையின் முகம் மாறியதாகவும்

ஆலய விசுவாசியும் எனது அத்தையும் திரு.மணிராஜ் அவர்கள் தாயருமான மேலத்தெரு திருமதி.குழந்தைத்தாய் அவர்கள் கண்ட அற்புதமான உண்மையான அந்தக் காட்சியை கூறியபோது மற்ற விசுவாசிகள் நம்ப மறுக்க ..அந்த இறைசாட்சி பொய்சாட்சியாக சித்தரிக்கப்பட்டனர்

மேலக்கலங்கல் ஆலய விசுவாசிகளே இப்போது கூறுங்கள் அந்த இறைசாட்சி இறைசாட்சிதானே..

இறைசாட்சிதான் ..அன்னைமுகம் 2017 யில் மாற வில்லை..1990 களிலே அன்னை அன்றே புன்னகைத்து கண் திறந்துவிட்டார்...

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Jun-23, 6:05 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : enathu aalayam
பார்வை : 65

மேலே