எனது ஆலயம்
எனது ஆலயம்
@@@@@@@@
மேலக்கலங்கலில் புனிதர் தெரேசாவின் இறைசாட்சி :
கிபி1800 யின் இடைப்பட்ட பகுதியில் கிருத்துவ மிஷினரிகளால் எனது மூதையர் மதம் மாற்றப்பட்டு இருக்கலாம்..கி.பி 1930 வரை குடிசையால் ஆன ஆலயத்தில் வழிபாடு நடந்திருக்கலாம்...
புனிதர் தெரேசாவிற்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள் வழங்கப்பட்டது.புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால் வழங்கப்பட்டது
அப்போஸ்தலர்கள் மூவர்களுக்கும் சேர்ந்தமரம்,புன்னைவம்,ஊத்துமலையில் ஆலயங்களில் புனிதராக அறிவிக்கப்பட்ட நிலையில் ..1930களில் அல்லது 1938 -ஆம் ஆண்டு சேர்ந்தமரத்தின் பங்குத்தந்தையாக அருட்பணி எஸ். இருதயம் அவர்கள் பொறுப்பேற்றே காலத்தில் மேலக்கலங்கல் ஆலயம் புத்துயிர் பெற்றிருக்கலாம்..
1945-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளிலிருந்து ஊத்துமலை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது முதல் பங்குத்தந்தையாக அருட்பணி A. S துரைராஜ் அடிகளார் பொறுப்பேற்றார் அதன் கீழ் மேலக்கலங்கல் சபை வந்து மேம்படுத்தப்பட்டபோது
அவர்கள் காலத்தில்தான் மேலக்கலங்கல் ஆலயத்தின் புனிதராக புனிதர் குழந்தை தெரேசா ஆலயம் திருநிலைப் படுத்தப்பட்டிருக்கக் கூடும்....
தொடரும்....
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்