எனது ஆலயம்

எனது ஆலயம்
××××××××××××××
80 ' களில் மேலக்கலங்கல் புனிதர் குழந்தை தெரேசா ஆலயம்...

அன்னை இறையாட்சி செய்வதற்காக இறையடி எய்திய புரட்டாசி திங்களில் ஒவ்வொரு ஆண்டும் மேலக்கலங்கல் புனிதர் குழந்தை தெரேசா ஆலயத்தில் திருவிழாவும் ..புனிதர் தேர்பவனியும் நடைபெற்று வருகிறது...

10 நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது..முதல் நாளில் கொடியேற்றத்துடன் சிறப்பு திருப்பலியும் ..அதனை தொடர்த்து ஒவ்வொரு நாளும் இரவு திருப்பலி யும் ..செபமாலையும்..தெரேசாளிடம் வேண்டுதல் செபமும் நடைபெறும்

9ஆம் நாள் இரவு 7 மணியளவில் அருட்தந்தை அழைப்பாக ஊரின் எல்லையில் ஊர் மக்கள் திரண்டிருந்து நையாண்டி,clarinet,saxophone இசை முழங்க வானவேடிக்கை அதிர ஆளுயர மாலை அணிவித்து ஊர்வலமாக மரியாதை நிமித்தமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்..

இரவு 8.00 திருப்பலியும் நடைபெறும் அதனுடன் பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் வழங்குதல் நடைபெறும்.நற்கருணை, செபமாலையைத் தொடர்ந்து..

இரவு 10.00 மணியளவில் அன்னையின் தேர்பவனி மேலக்கலங்கலின் முக்கிய பெரிய வீதிகளில் நடைபெறும்...

10 ஆம் நாள் காலை 8.00 மணியளவில் பங்குத்தந்தையுடன்..சிறப்பு விருந்தினராக மற்ற பங்கைச் சார்ந்த அருட்தந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடைபெறும் அதனை தொடர்ந்து வாழ்த்துரையும்..நன்றியுரையும் நடைபெறும்..அதன் பின் அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட ரோசா மலர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்..

அதனைத் தொடர்ந்து முடிக்கணிக்கை செலுத்துவோர் செலுத்துவர்கள்

காலை 10.00 மணியளவில் அன்னையின் தேர்பவனி மேலக்கலங்கலில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் ,அனைத்து வீட்டின் முன்பும் அன்னை செல்லும் காட்சி பார்க்க கண்கோடி வேண்டும்...தேர்பவனி மாலை 4.30 வரை நடைபெறும்..

மாலை 5.00 மணியளவில் கொடியெறக்கமும்..நற்கருணை ஆசிர்ருடன் விழா நிறைவுறும்...

தொடரும்.....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்த

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Jul-23, 4:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : enathu aalayam
பார்வை : 117

மேலே