எனது ஆலயம்
எனது ஆலயம்
×××××××××××××××
1970 களில் வறட்சினால் பஞ்சமும் மேலக்கலங்கல் சபையின் உதவியும்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1974 யில் தமிழகத்தின் தென் பகுதியில் பயங்கரமான வறட்சியின் காரணமாக பஞ்சம் ஏற்பட்டு மக்கள் துன்பப்பட்ட காலத்தில் ஊத்துமலை பங்கு தந்தையாக
அருட்பணி சலேத் ஜெயபாலன் அவர்கள் பணியமர்ந்தார். அருட்தந்தையவர்கள் பல்வேறு நிவாரணப் பணிகளை தக்க விதத்தில் மேற்கொண்டு மக்களின் வறுமையை போக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்த மண்வாரி (காற்றில் மண் பறக்குமளவிற்கு கடும் பஞ்சம்) பஞ்சத்தின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக பாண்டிச்சேரியை சேர்ந்த FIHM (Franciscan Sisters of the Immaculate Heart of Mary) சபை கன்னியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் மக்களுக்கு மக்காச்சோள உணவு மற்றும் பசியாற பல்வேறு சத்து உணவுகளை அருட்சகோதரிகளே சமைத்தும்; கருவுற்ற பெண்கள், குழந்தைகளுக்கு பால் உணவுகள், ஊட்டச்சத்து உணவுகளும் ஊத்துமலை பகுதியில் உள்ள அனைவருக்கும் சாதி சமய பேதமின்றி கொடுக்கப்பட்டபோது
மேலக்கலங்கல் திருச்சபைக்கு முக்கியத்துவம் தந்து முழுக் கோதுமையும்..ஊட்டச்சத்து கோதுமை மாவும் 80 ' களின் பின் பகுதி வரை சாதி மத இன வேறுபாடின்றி மேலக்கலங்கல் மக்களுக்கு ஊத்துமலை பங்கின் அருட் சகோதரிகள் ஞாயறு தோறும் குழந்தைகளுக்கு எடை பார்க்கப்பட்டு ஊட்சத்து மாவினை வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களின் சேவை உள்ளத்தால் இவ்வாலயத்தின் புகழ் எங்கும் பரவியது. மேலக்கலங்கல் மக்கள் இன்றுவரை ஒற்றுமையுடன் எல்லா நிகழ்வுகளிலும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு ஊத்துமலை பங்கின் அன்றைய அருட்சகோதரிகளின் பணியே காரணம்
ஆர்சி சபை நிர்வாகம் ஊட்டச்சத்து மாவு வழங்கும் பணியை மீண்டும் தொடர முன்வர வேண்டும்....
தொடரும்.....
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்