கவிதையாக வந்தவளே
கவிதையாக வந்தவளே !
****************************
புதுக்கிரமாத்தில் சொந்தத்தின்
புதுமனைப் புகுவிழாவில் /
பாவாடைச் சாட்டையில்
பருவமடையாதப் பெண்ணை /
பாட்டிகள் கைகாட்டி
பார்த்துக் கொள் உனக்கு /
பொஞ்சாதி இவள்தானென
பக்குவமாக எடுத்துச் சொல்ல/
கவிதா மனதில்
கவிதையாக வந்தாள் /
கண்மூடித் தூங்கினாலும்
கனவில் அவள்தான் /
கவிதையை கண்டபின்
கண்ட பெண்களை /
காண மறந்தேன்
கற்க்கண்டாய் அவள் நினைவில் /
அறியாத வயதில்
அரும்பியக் காதல் /
பருவ வயதில்
பக்கம் மாறியது/
கல்லூரிக்குச் சென்றேன்
கண்ணில் பட்டாள் /
கலைநயமிக்க மாதவியிடம்
கோவலன் சங்கமித்தது போல் /
அவளிடம் சரனடைந்தேன்
அழகில் அல்ல /
அறிவில் சிறந்தவள் என்பதால்
அடிமையானேன் அவளுக்கு/
கவிதையை வெறுத்தேன்
காதலியை நினைத்து/
காதலியை மறந்து
கைப்பிடித்தேன் கவியை /
சித்தியாம் முறைக்கு அப்பாவின்
சில்லரை பணத்தசைக்கு அப்பாவி/
சிக்கிக் கொண்டேன்
சித்திக்கு புருஷனாக /
மனதில் காதலியுடனும்
மணவாழ்க்கையில் மனைவியுடனும் /
இருதலைப் பாம்பாக
இரக்கமற்றவர்களால் தவித்தேன் /
மனைவியாக வந்தவள்
மனதில் வாழ்ந்தவள்தான் /
மணவாழ்க்கையில் ஏனோ
மனமார்ந்து செல்ல இயலவில்லை/
மனமார பிரிந்தோம்
மனதால் வாழ்கிறோம் /
கவிதையாக வந்தவள்
கானல் நீராக மறைந்தாள் /
இதயத்தில் கவிதையாக
இன்றும் வாழ்கிறாள் /
காதலியாக இல்லை
மனைவியாக இல்லை
துனைவியாக இல்லை /
நல்லதோர் தோழியாக
மீன்டும் சித்தியாக /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்