மலைமகள்
தோழியர் கூட்டத்தின் நடுவே நின்றாலும் கூட
சமவெளியில் மலை போல் தனியே தெரிந்தாள்
தனிமை இருள் நிறைந்த என் நெஞ்சினிலே
மங்கல தீபமாய் சுடர்விட்டெரிந்தாள்
மலையில் படர்ந்த பசும் காட்டினை போல்
அவள் சிரசில் கூந்தல் நெளிந்தது
அழகி அவளிடம் பேச நினைத்தேன்
என் தைரியம் எங்கோ ஒளிந்தது
மலையில் விளையாடும் மான் கூட்டம் கண்டு
மலையின் உச்சிக்கு ஏறினேன்
மானுக்கு இடம் தந்தவள் எனக்கும் தருவாள்
என்று எண்ணி என் காதலை கூறினேன்
சுடுகனலென்ற அவள் வார்த்தைகளால்
என் நெஞ்சம் இரண்டாய் கிழிந்தது
மலை போல் அவளை கண்களில் வைத்தேன்
மலையருவி என் கண்களால் வழிந்தது