கரைந்தது
பிடிக்கவில்லை என்று கூறி நீ விலகி சென்றாய்
என் பிடிக்கவில்லை
புத்தக புழுவாய் வாழ்ந்திருந்த நீ
என் நெஞ்சை படிக்கவில்லை
கடல் மணலில் விழுந்து புரண்டேன்
நண்டு கிள்ளியது வலிக்கவில்லை
நீ என் நெஞ்சை கிள்ளியது வலித்தது
அழுது அழுது கடலே நிரம்பி விட்டது
இனி அழ கண்ணீர் இல்லை
அழுதாலும் உன் கல் மனம் கரையப்போவதில்லை
மண்ணில் கட்டிய கோட்டையாய்
என் காதல் மட்டும் கரைந்தது