விண்ணிலும் கண்ணிலும் மழைமேகம் 555

***விண்ணிலும் கண்ணிலும் மழைமேகம் 555 ***


ப்ரியமானவளே...


மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...

மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...

துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...

உன்னிடம் எனக்கு
உரிமை உண்டென...

உரிமை உன்னிடம்
எடுத்துக்கொண்டேன்...

எடுத்து கொண்ட
உரிமையே எதிரியாக எனக்கு...

நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...

உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...

உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை...

நானும்
உணர்ந்தேன் உன்னால்...

உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...

உரிமை இல்லாத இடத்தில் கோபம்
சண்டையும் அமைதிகொள்ளும்...

உன்னோடு வாதாட
என்னால் முடியவில்லை...

நானும் உரிமை இல்லாதவனாக
விலகியே இருக்கிறேன் உன்னால்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (21-Jun-23, 4:28 pm)
பார்வை : 565

மேலே