கருப்பு தான் எனக்கு பிடிச்ச

அப்பா...,
@@@@
என்னம்மா ஷ்வேதி?
@@@@@
எனக்கு நீங்க பார்த்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா.
@@@@@@
ஏம்மா ஷ்வேதி?
@@@@@@@
அந்தப் பையன் சிவப்பா இருக்கிறான். ரொம்ப உயரம்.
அழகான பையன். வசதியான குடும்பம். மாதம் இரண்டு இலட்சம் சம்பாதிக்கிறான். அவனைப் போயி வேண்டாம்னு சொல்லறே என்னம்மா நியாயம் இது?
@@@@@@@
அப்பா எனக்கு வயது 25. நம்ம குடும்பமும் வசதியான குடும்பம் தான். நானும் மாதம் இரண்டு இலட்சம் சம்பாதிக்கிறேன். என்னை மாதிரி சிவப்பா அழகாக இருக்கிற பொண்ணுங்க எல்லாம் கறுப்பா, இலட்சணம் இல்லாத பையன்களைத் தான் திருமணம் பண்ணிக்கிறாங்க. அந்த மாதிரி பையன்கள் தான் மனைவி சொல்லே மந்திரம்னு நடந்துக்குறாங்களாம்.

அந்த மாதிரி பையன்களைக் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுங்க எல்லாம் சந்தோசமா வாழ்ந்திட்டு இருக்கிறார்கள். எனக்கு அந்த மாதிரி ஒரு பையனைப் பாருங்க. இல்லைன்னா நான் வாழ்நாள் முழுவதும் கன்னிப் பெண்ணாகவே வாழ்ந்துட்டுப் போறேன்.
@@@#####
அம்மா, அம்மா ஷ்வேதி வேண்டாம்மா. உனக்குன்னு கறுப்பு மாப்பிள்ளையை நான் எங்க போயித் தேடறது. சரி‌. விளம்பரம் குடுக்கிறேன். ஏதாவது ஒரு கறுப்பன் மாட்டமா போயிடுவான் என்ன?
@@@@@@#@@@@@@@@@@@@@@@@@@@
அனுபவத்தில் கண்ட உண்மை.

எழுதியவர் : மலர் (8-Jul-23, 9:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 85

மேலே