விளை நிலம்
விளை நிலம்
××××××××××××
விளை நிலம் விளைந்தால் விலையாகும்
விளை பொருள் விளையும் காலமெல்லாம்
விளை நிலம் விலை நிலமானல்
விலை போகின்ற நாளொன்றே விலையாகும்
புகுந்திட வாழ்ந்திடப் புறம்போக்கு நிலம்
புறம் அகமென நகரில் இருக்க
புசிக்க உணவளிக்கும் புண்ணியப் பூமியின்
புனிதமான விவசாய நிலைத்தை வளைப்பதேன்
பயிர் விலையில் லாபம் நஷ்டம்
பஞ்சம் வரும் போகும் நிலையனதல்ல
பஞ்சப் பூதப் பதிப்பும் நிரந்தரமில்லை
பசிக்கு உணவே மனிதனுக்கு நிரந்தரம்
பசிக்கு உணவு ஒன்றே தீர்வு
உணவுக்குப் பயிர் செய்தலே விதி
பயிர் செய்திட விவசாய நிலமே
விவசாய நிலமில்லையெனில் உயிர்களுக்கு உயிரில்லை
செவ்வாயில் இடம் வாங்கி வாழ்ந்தாலும்
புதனில் புகுந்து வாழத் துடித்தாலும்
நிலவுக்கு இன்பக் கனவோடுச் சென்றாலும்
உயிர் வாழப் பூமி விளைய வேண்டும்..
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்