வெண்ணரி நிலையிலே தரகருமே - கலித்துறை

கலித்துறை

விளம் மா விளம் விளம் காய்

இறக்கவே இருக்கும் தேதியை முதலிலே குறிப்பிட்டே
பிறக்கவே வைத்தான் இறைவனும் உயிர்களை உலகிலேயே
பறப்பன ஊர்ந்தும் வாழ்ந்திடும் உயிருளே மனிதனையும்
குறைக்கவே முடிவை வைத்துமே செய்தது இறுதிநாளாம். (க)

எண்ணமும் செயலும் பொய்யினால் பிணைத்துமே எதனையுமே
வெண்மைபோல் புனையும் மென்மையின் தலைவனாம் மனிதரையும்
கண்ணனின் நிறத்து பல்நிற குழக்களின் கலவைகளை
கண்டவன் இறைவன் என்பதால் தருகிற தண்டனைமா (உ)

நெல்லுடன் வரகு எண்ணெயின் விதைகளை பயிரிட்டு
அல்லிலும் அரவின் அச்சமும் பயத்தினை காட்டிணுமே
நல்லதாய் குடும்பம் உய்யவே எதனையும் தாங்கியுமே
பல்வகை கடையில் விற்கையில் அரைவிலை கேட்பதுவோ (ங)

காணியில் பயிரை வைத்திடில் குடும்பமும் ஏழ்மையிலே
பேணிடும் பயிர்கள் விலைகளோ கழிவுநீர் சேர்ந்ததைபோல்
ஊணினை பிடுங்கும் வெண்ணரி நிலையிலே தரகருமே
வேணுமோ இனியும் இந்தகீழ் நிலைகளும் பயிர்வேண்டாம் (ரு)
—- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jul-23, 2:33 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 32

மேலே