பாறை ஒன்று எடை குறைக்கிறது
பாறை ஒன்று எடை குறைக்கிறது
தன் தலைமேல்
விழும் அடிகளை
வாங்கி
வலியால் கூவி
அந்த பாறையை
குத்தி குடைகிறது
இந்த சிறு
உளி
சிதறும் தன்
உடல்களை
வேதனையாய்
பார்த்தாலும்
உடல் குறைவதும்
சுகமாகத்தான் இருக்கிறது
இந்த பாறைக்கு
குறைந்த தன்
உடலை
தானே பார்க்க
சீ..வெட்கத்தில்
தலை சாய்ந்து
ஒய்யாரமாகத்தான்
பார்க்கிறது
தன்னை அழகிய
சிற்பமாய் இரசிக்கும்
இந்த மனித
கூட்டங்களை